"ஸலாத்தை பரப்புவோம்"

அன்புள்ளம் கொண்ட எனதருமை சகோதர, சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு (அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் பாக்கியமும் உங்கள் மீது உண்டாகட்டும்!)

நம்மிடயே இன்று மறைந்துக்கொண்டு வருகின்ற ஒரு முக்கியமான சுன்னா - அதுதான் ஸலாம் கூறுதல்.

இன்று மேற்கத்திய கலாசாரம் பரவலாக நம் மக்களிடையே பரவி இருக்கும் சூழ்நிலையில் அலுவலகத்தில் பணிபுரிவோர், பள்ளி, கல்லூரிகளில் படிப்போர் மற்றும் சமூக இணையதளத்தை பயன்படுத்துவோர் என பல சகோதர சகோதரிகள்.  தனது நுனி நாக்கில் ஆங்கில புலமை உள்ளதை நிரூபிக்க வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திலோ அல்லது நினைப்பிலோ தெரியவில்லை. பிறரை சந்திக்கும்போழுதும், பிறருடன் உறையாடும்போழுதும் மற்றும் தகவல்களை பறிமாறிக்கொள்ளும்போழுதும் தொடக்கத்தில்  Hi, Good Morning, Good Noon, Good Eve, போன்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள்.

 இது முற்றிலும் மார்கத்திற்கு மாற்றமான செயல் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

 ஸலாம் கூறுதல் என்ற இஸ்லாத்தின் வழிகாட்டளை அறிந்துக்கொள்ளவேண்டும்.

ஸலாம் கூறுதலின்  சிறப்புகள் மற்றும் நன்மைகளை நாம் அனைவரும் அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்திற்காக "ஸலாத்தை பரப்புவோம்" என்கிற இந்த ஹதீஸ்களின் தொகுப்பு. படித்து பயன்பேறுவோம், பிறருக்கு பகிர்ந்து நன்மைபெறுவோம்.

 ''உங்களுக்கு நம்பிக்கை (ஈமான்) பிறக்கும் வரை நீங்கள் சுவனத்தில் நுழைய முடியாது. உங்களில் ஒருவரையொருவர் உளமாற நேசிக்கும் வரை நீங்கள் நம்பிக்கை (ஈமான்) கொண்டவர்களாக ஆக முடியாது. எச்செயல் பிறரை உளமாற நேசிக்கவைக்கும் என்பதை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? உங்களுக்கிடையில் ஸலாமைப் பரப்புங்கள். (அது உங்களுக்கிடையில் நேசத்தை ஏற்படுத்தி நம்பிக்கையைப் பலப்படுத்தி, சுவனத்தில் நுழைவதற்கு வழி வகுத்துவிடுகிறது) என்று நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்" என அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: முஸ்லிம், அபூதாூது, மற்றும் திர்மிதீ)

    ''இறைவன் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து, அங்கே இருந்த வானவர் (மலக்கு)களிடம் சென்று அவர்களுக்கு ஸலாம் கூறும்படியும், அதற்கு அவர்கள் என்ன பதில் கூறுகின்றார்கள் என்று செவியேற்கும்படியும், அதுதான் உமக்கும் உமது வழித்தோன்றல்களுக்கும், முகமன் (கூறும் முறை) என்றும் சொன்னான். அப்போது ஆதம்(அலை) அவர்கள், அவ்வாறே 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூற, வானவர்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்று கூறி ரஹ்மதுல்லாஹி என்பதை அதிகப்படுத்திச் சொன்னார்கள் என்று நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்" என அபூ ஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார், (நூல்: புகாரி, முஸ்லிம்)

    ''நபி صلى الله عليه وسلم  அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் (இறைவனின் அருள், சாந்தி உங்களுக்கு உண்டாகட்டும்!) என்று சொன்னார். அதற்கு, நபி صلى الله عليه وسلم அவர்கள் பதில் சொன்னார்கள். அவர் அமர்ந்தார், நபி صلى الله عليه وسلم  அவர்கள், பத்து (நன்மைகள்) என்றனர். பின்பு மற்றொருவர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி என்றார் அதற்கு, நபி صلى الله عليه وسلم  அவர்கள் பதில் சொன்னார்கள். அவரும் உட்கார்ந்துவிட்டார். அப்போது நபி صلى الله عليه وسلم  அவர்கள் இருபது (நன்மைகள்) என்றார்கள். மேலும் ஒருவர் வந்து, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு (அல்லாஹ்வின் சாந்தியும், அருளும் பாக்கியமும் உங்கள் மீது உண்டாகட்டும்!) என்றார். அதற்கு, நபி صلى الله عليه وسلم  அவர்கள் பதில் சொன்னார்கள். அவரும் அமர்ந்தார். அப்போது நபி صلى الله عليه وسلم  அவர்கள் முப்பது (நன்மைகள்) என்றார்கள்"" என இம்ரான் இப்னு ஹுஸைன் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: திர்மிதீ, நஸயி மற்றும் அபூதாூது

    இஸ்லாத்தில் மிகச் சிறந்த நற்செயல் எது என்று ஒரு மனிதர் நபி صلى الله عليه وسلم  அவர்களிடம் கேட்டதற்கு, ''பசித்தோருக்கும், ஏழைகளுக்கும் உணவு வழங்குவது. இன்னும் உனக்கு அறிமுகமான, அறிமுகமல்லாத அனைவருக்கும் 'ஸலாம் சொல்வதுமாகும்" என்று நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்"" என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி அல் ஆஸ் رَضِيَ اللَّهُ عَنْهُஅறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம் மற்றும் அபூதாூத்
  
    ''(இருவர் சந்திக்கும்போது) யார் ஸலாமை முதலில் சொல்கிறாரோ, அவர் மக்களிலேயே அல்லாஹ்விடம் மிகுந்த சிறப்பிற்குரியவர் என்று நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள் என அபூ உமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்." நூல்: அபூதாூது, அஹ்மத்

    ''இரண்டு பேர் சந்திக்கும்போது யார் முதலில் ஸலாம் கூறுவார் என, நபி صلى الله عليه وسلم அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ''அவ்விருவரில் அல்லாஹ்விடம் மிக மேன்மைக்குரியவர் முதலில் ஸலாம் கூறுவார்" என்று அவர்கள் பதிலளித்தார்கள்" என அபூ உமாமா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். (நூல்: திர்மிதீ)

    ''வாகனத்தில் செல்பவர், நடந்து வருபவருக்கு ஸலாம் கூறுவார். நடந்து வருபவர், அமர்ந்திருப்பவருக்கு ஸலாம் கூறுவார். சிறுகூட்டம் பெருங்கூட்டத்திற்கு ஸலாம் கூறும்" என அபூஹுரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாூத் மற்றும் திர்மிதீ புகாரியின் மற்றோர் அறிவிப்பில் சிறியவர்கள், பெரியவர்களுக்கு ஸலாம் கூறுவர் என்று உள்ளது.

    ''இரண்டு பேர் சந்தித்து இவர் அவரைப் புறக்கணித்து; அவர் இவரைப் புறக்கணித்து (இப்படி) ஒரு முஸ்லிம் தன் சகோதரரான இன்னொரு முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் வெறுப்பது கூடாது. (இந்நிலையில்) அவ்விருவரில் எவர் முதலில் 'ஸலாம்" (சொல்லிப் பேச்சை) ஆரம்பிக்கிறாரோ, அவரே சிறந்தவர் என்று நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள் என அபூஅய்யூ அல் அன்ஸாரி رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாூத்

    ''இறைநம்பிக்கையாளர் ஒருவர் மற்றோர் இறைநம்பிக்கையாளரை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து (பேசாமல்) இருப்பது ஆகுமானதல்ல. மூன்று நாட்கள் இப்படிக் கழிந்துவிட்டால் (ஒருவர் மற்றொருவரைச்) சந்தித்து 'ஸலாம்" கூறட்டும். (மற்றொருவர்) பதில் 'ஸலாம்" கூறிவிட்டால், இருவருமே சன்மானத்தில் கூட்டாகி விடுகின்றனர். பதில் 'ஸலாம்" கூறாவிட்டால் (பதில் கூறாதவர்) பாவத்திற்கே திரும்பிவிடுகிறார். ஆரம்பமாக 'ஸலாம்" கூறியவர் (இறைவனுடைய) வெறுப்பை விட்டும் நீங்கி விடுகிறார் என்று நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்"" என அபூஹ{ரைராرَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: அபூதாூத்

    ''நபி صلى الله عليه وسلم  அவர்களின் தோழர்களிடம் (இருவர் சந்தித்துக் கொள்ளும்போது) (முஸாஃபஹா எனும்) கை கொடுத்தல் இருந்ததா என்று நான் அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் ''ஆம்"" என்றார்கள்"" என கதாதா(ரலி) அறிவிக்கிறார். நூல்: புகாரி, திர்மிதி

    உன் சகோதரன் முகத்தைப் புன்முறுவலுடன் பார்ப்பது உட்பட எந்தவொரு நற்காரியத்தையும் தாழ்வானதாகக் கருதாதே என்று என்னிடம் நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள் என அபூதர்رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார். நூல்: முஸ்லிம்

தொகுப்பில் தவருகள் இருப்பின்  idcpdk@gmail.com என்ற எங்களின் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள் திருத்திக்கொள்வோம்!


நிச்சயமாக அல்லாஹ்வே! மிக்க அறிந்தவன், மிகவும் ஞானமுடையவன்!

வீண்பழி சுமத்தாதீர்கள்!

மனித சமுதயாத்தினர் சிலர் எதையும் தீர்க்க அறிய முடியாதவர்கள் அரைகுறைத் தகவல்களை வைத்துக் கொண்டு வெகு விரைவாக எவர் மீதாவது பழி சுமத்திவிடுகின்றனர். பழி சுமத்துவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் ஆதிக்க உணர்வும் காரணமாகி விடுகின்றது. சிலர் சிலர்மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர். இந்த ஆதிக்கம் பலனளிக்காமல் போனால் இதுவே பழி சுமத்துவதற்கு காரணமாகி விடுகின்றது.
ஆதிக்கம் செலுத்துபவர்கள் அன்பு காட்டி பார்க்கின்றனர். அதற்கு அடிபணிய வில்லையானால் ஆசை காட்டி பார்க்கின்றனர். அதற்கும் மசியவில்லையானால் குற்றம் குறை ஏதும் இருக்கின்றதா? என்று பார்க்கின்றனர். இருந்து விட்டால் அதற்கு கண், காது, மூக்கு எல்லாம் வைத்து அரட்டி மிரட்டி அடி பணிய வைக்கின்றர். இதிலும் தோல்வி அடைந்துவிட்டால் பழி சுமத்தும் இழி செயலில் ஈடுபட்டு அடக்க முயல்கின்றனர்.
இது குறித்து அல்லாஹ் தன் திருமறையில் மூஃமினான ஆண்களையும், மூஃமினான பெண்களையும் செய்யாததை (செய்ததாக) கூறி எவர்கள் நோவினை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். (அல்குர்ஆன் 33:58)
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் ஏழை மனிதர்கள் யார் என வினவினார்கள் (அதற்கு தோழர்கள்) எங்களில் பொருள் வசதி இல்லாதவர்தான் ஏழை மனிதர் என பதிலளித்தார்கள்; அது சமயம் நபி (ஸல்) அவர்கள் கியாமத் என்னும் இறுதி நாளில் (நீங்கள் கூறிய நபர் அல்ல) அந்நாளில் ஏழை மனிதர் உலகிலிருந்து தொழுகை, நோன்பு, ஜகாத், போன்ற எல்லா வகையான வணக்க வழிபாடுகளையும் கொண்டு வருவார். அத்துடன் அவர் எவரையாவது திட்டியிருப்பார். எவர் மீதாவது பழி சுமத்தியிருப்பார். எவருடைய பொருளையாவது சாப்பிட்டிருப்பார். எவரையாவது அநியாயமாக கொன்றிருப்பார். எவரையாவது அநியாயமாக அடித்திருப்பார்.
ஆக இத்தகு குற்றங்களையும் கொண்டு வருவார். பின்பு இவருடைய நன்மைகளிலிருந்து (இவரால்) அநீதம் இழைக்கப்பட்டவருக்கு (நன்மை) வழங்கப்படும்; (இவரால்) மற்றொரு அநீதம் இழைக்கப்பட்டவருக்கும் இவருடைய நன்மைகளிலிருந்து வழங்கப்படும். (இப்படியே) இவருடைய நன்மைகள் எல்லாம் முடிந்துவிடும். (ஆனால்) மக்களுக்கு வழங்க வேண்டிய உரிமைகள் மீதமிருக்கும்; (ஆகவே) அம்மக்களின் குற்றங்களை அவர் மீது சுமத்தப்படும்; பின்பு அவரை நரகில் போடப்படும். (அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்)
தப்பெண்ணம் கொண்டு பழி சுமத்தும் இழி செயல் தான் நபித்தோழர்களையும், நபி உறவினர்களையும் ஷஹீதாக்கப்பட தூண்டுகோலாக இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. எவனாவது எவனுடைய குறையையேனும் தோண்டித் துருவி அலசி ஆராய்ந்து தக்க ஆதராமின்றி அவதூறு கூறுவானோ, வீண் பழி சுமத்துவானோ அவனது அந்தரங்க குறைகளை அல்லாஹ் அவனுடைய வீட்டிலேயே வைத்தே வெளிப்படுத்தி விடுவான்.
அவரவர் தத்தமது குறைகளைத் தேடித் திருத்தி கொள்பவரே அறிவாளி; அடுத்தவர் குறை தேடி பழி சுமத்துபவர் அறிவிளி.  பிறர் மீது பழி சுமத்தும் இழி செயலை விட்டும் அல்லாஹ் நம்மை காப்பற்றுவானாக!