எயிட்ஸுக்குத் தீர்வு இஸ்லாமியக் கொள்கையே! மீண்டும் நிரூபித்தது பி.பி.ஸி உலக சேவை.



எயிட்ஸுக்குத் 
தீர்வு இஸ்லாமியக்
கொள்கையே! மீண்டும்
நிரூபித்தது பி.பி.ஸி

உலக சேவை.

---------------------------------------

இயற்கை மார்க்கம் தான்
உலகின் அனைத்துப்
பிரச்சினைகளுக்கும்
சரியான தீர்வைத் தர
முடியும். இஸ்லாம்
என்பது இறைவனால் அருளப்
பெற்ற
இயற்கை மார்க்கமாகும்.
இந்த இயற்கை மார்க்கம்
மனிதனின் அனைத்துப்
பிரச்சினைகளுக்கும் மிகத்
தெளிவான பதில்களைத்
தருகிறது என்றால்
அது மிகையில்லை.
உலகையை ஆட்டம் காணச்
செய்யும் மிகக் கொடிய
நோயான ஹெச்.ஐ.வி.
எய்ட்ஸை விட்டும்
மனிதனைக் காப்பாற்ற பல
நாடுகளும் தங்களால்
முடிந்த மருத்துவக்
கண்டுபிடிப்புக்களில்
இறங்கியுள்ளன.
இவ்வகையில்
ஆய்வுகளை மேற்கொண்ட பல
நாடுகளும் இந்தக்
கொடுமையான
நோய்க்கு தீர்வாக
முன்வைத்துள்ளதுவிருத்த
சேதனம் என்ற இஸ்லாமிய
வழிகாட்டளைத் தான்.
ஆம் ஆண்கள் தங்கள் மர்ம
உருப்பின் முன்
பகுதியை நீக்கி விருத்த
சேதனம் செய்து கொள்வதின்
மூலம் இந்த நோயின்
பாதிப்பை 60 சதவீதத்தினால்
குறைக்க முடியும்
என்று தெரிவித்துள்ளது.
இஸ்லாம் கூறும் தீர்வுதான்
இறுதித் தீர்வாகும்.
“இயற்கை மரபுகள்
ஐந்தாகும்.விருத்த சேதனம்
செய்து கொள்வது,மர்ம
உறுப்பின் முடிகளைக்
களைந்து கொள்வதற்காக
சவரக்
கத்தியை உபயோகிப்பது
,மீசையைக் கத்தரிப்பது
,நகங்களை வெட்டுவது
,அக்குள்
முடிகளை அகற்றுவது
ஆகியவை தாம் அவை
”என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி),நூல்:
புகாரி5891
மேற்கண்ட செய்தியில்
இயற்கையாக செய்ய
வேண்டிய கடமைகளின்
பட்டியலில் முதல் இடத்தில்
விருத்த சேதனத்தைத் தான்
இஸ்லாம் குறிப்பிடுகிறது.
ஆண்கள் விருத்த சேதனம்
செய்து கொள்வதென்பது
எயிட்ஸ் என்ற கொடிய
நோயிலிருந்து அவர்களைப்
பாதுகாக்க பெரிதும்
உதவுகின்றது என்பதை
இன்றைய அறிவியல் உலகம்
நிரூபித்துள்ளது.
பி.பி.ஸி உலக
சேவை 18.08.2011
வெளியிட்டுள்ள தகவல்.
உலகெங்கும்
மூன்று கோடியே முப்பது
லட்சத்துக்கும் அதிகமானோர்
எச் ஐ வியினால்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்களில் மூன்றில்
இருண்டு பங்கினர்
சஹாரா பாலைவனத்துக்கு
தெற்கே உள்ள ஆப்பிரிக்க
நாடுகளைச்
சேர்ந்தவர்களாவர்.
இந்த எச் ஐ வி மற்றும்
எயிட்ஸை
குணமாக்குவதற்கான
வழிகளை விஞ்ஞானிகள்
தேடிக்கொண்டிருக்கும்
அதேவேளை
,அதனை தொற்றாமல்
தடுப்பதற்கான வழிகள்
குறித்தும் பெரும்
ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்த நோய் பெண்களில்
இருந்து ஆண்களுக்கு
பரவுவதை ஆண்கள்
விருத்தசேஷனம்
செய்து கொள்வதன்
மூலம்60வீதத்தால் குறைக்க
முடியும் என்று அண்மைய
ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
அதாவது முஸ்லிம்கள் உட்பட
சில சமூகத்தினர்
செய்துகொள்வது போன்று
ஆண்குறியின் முன்
தோலை அகற்றுவதே விருத்த
சேஷனம் ஆகும்.
இதனால்,பல ஆப்பிரிக்க
நாடுகளில் ஆண்கள் விருத்த
சேஷனத்தை செய்து
கொள்வதை ஊக்குவிப்பதற்கான
திட்டங்கள் தற்போது
ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜிம்பாப்பேவேயிலும்
அரசாங்கம் இப்படியான
திட்டத்தை அமல்படுத்தத்
தொடங்கியுள்ளது.2025ஆம்
ஆண்டுக்குள் பத்து லட்சம்
ஆண்களுக்கு விருத்த
சேஷனம் பண்ண முடியும்
என்று அந்த நாட்டின்
அரசாங்கம் நம்புகிறது.
ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ்
பற்றி பி.பி.சி ஏற்கனவே
வெளியிட்ட ஒரு தகவல்.
இஸ்லாம் சொல்லும்
கத்னா முறை – ஆண்கள் தங்கள்
மர்ம உருப்பின் முன்
பகுதியை நீக்குவதின்
மூலம் விருத்த சேதனம்
செய்துகொள்வதின்மூலம்
ஏற்படும்
நன்மைகளை பி.பி.சி உலக
சேவை ஏற்கனவே பல
முறை சுட்டிக்
காட்டியிருந்தது. அதன்
ஒரு பகுதியை இந்த
ஆக்கத்துடனும் இணைத்துத்
தருகிறோம்.
ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ்
தொடர்பாக உலகளவிலான
மிகப் பெரிய
மாநாடு விரைவில்
ஆஸ்திரேலியாவின்
சிட்னி நகரத்தில்
நடைபெறவுள்ளது.
அதற்கான பணிகள்
தற்போது மும்முரமாக
நடைபெற்று வருகின்றன.
ஆண்களுக்குச் செய்யப்படும்
கத்னா (விருத்த சேதனம்) 60
சதவிகித அளவுக்கு எய்ட்ஸ்
வராமல் தடுக்கிறது என்ற
கண்டுபிடிப்பு
உறுதியானது தான்
என்பதைக் கூறும்
ஆய்வறிக்கை இந்த
மாநாட்டில்
சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த
ஆய்வறிக்கையை 5000க்கும்
மேற்பட்ட குழுக்கள்
பெற்றுக் கொள்கின்றன
என்று பி.பி.சி.யின்
செய்தி தெரிவிக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளில்
வாழும் முஸ்லிம்களில்
எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர்
மிகக் குறைவு தான்.
ஆனால் முஸ்லிமல்லாதவர்கள்
மிக அதிகமான அளவில்
பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற
விபரம் நீண்ட நாட்களாக
அறியப்பட்ட உண்மையாகும்.
தென் ஆப்பிரிக்க ஆண்களில் 60
சதவிகிதம்
பேரை ஹெச்.ஐ.வி.
தொற்றும்
அபாயத்திலிருந்து கத்னா
காக்கின்றது என்று ஏற்கனவே
கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக்
கண்டுபிடிப்பை அண்மையில்
கென்யாவிலும்,
உகாண்டாவிலும் சேகரித்த
ஆதாரம்
உறுதி செய்கின்றது.
இவ்வாறு கத்னா ஒரு காவல்
அரணாக
அமைந்திருப்பதை அறிய
முடிகின்றது என்று தனது
செய்தியில் பி.பி.சி.
தெரிவிக்கிறது.
இந்தக் காவல்
அரணுக்கு கத்னா தான்
காரணமா? அல்லது அவர்கள்
குறைந்த அளவிலான
பெண்களிடம்
உடலுறவு கொள்வது தான்
காரணமா?
என்று தெரியவில்லை என்றும்
அந்தச்
செய்தி குறிப்பிடுகின்றது.
அதாவது முஸ்லிம்களிடம்
உள்ள விபச்சாரத் தடை,
பலதார மணம் போன்றவையும்
இதற்குக் காரணமாக
இருக்கலாம்
என்று கூறுகின்றது.
கத்னா, விபச்சாரத் தடை,
பலதார மணம் இம்மூன்றில்
எதுவாக இருந்தாலும்
அது இஸ்லாமிய
மார்க்கத்தினால்ஏற்பட்ட
கண்ணியம் தான்.
ஹெச்.ஐ.வி.
பாதிப்பை விட்டும்
பாதியளவுக்கு கத்னா
பாதுகாக்கிறது என்று
அமெரிக்காவின் சுகாதார
அதிகாரிகளை மேற்கோள்
காட்டி நியூயார்க்
டைம்ஸின் செய்தியாளர்
டொனால்டு ஜி. மெக்நெய்ல்
குறிப்பிடுகிறார்.
சுரப்பிகளிலிருந்து சுரந்து
வரும் உயிரணுக்கள்
ஆணுறுப்பின் நுனித் தோல்
பகுதியில் தேங்குகின்றன.
ஹெச்.ஐ.வி.யினால்
பாதிக்கப்பட்ட பெண்ணின்
வைரஸானது உடலுறவின்
போது,
ஏற்கனவே தேங்கி நிற்கும்
இந்த உயிரணுத்
தொகுதிக்குள் எளிதில்
தொற்றிக்
கொண்டு விடுகின்றது.
அதனால் உடலுறவு கொண்ட
அந்த ஆணும் ஹெச்.ஐ.வி.
வைரஸின்
தாக்குதலுக்கு எளிதில்
இலக்காகி விடுகின்றான்
என்று அந்தச் செய்திக்
குறிப்பில் அவர் மேலும்
தெரிவிக்கின்றார்.
இறுதியாக………………
இஸ்லாமிய மார்க்கம் தான்
இவ்வுலகின் அனைத்துப்
பிரச்சினைகளுக்கும்
தீர்வு சொல்ல முடியும்
என்பதை மேற்கண்ட செய்திகள்
மீண்டும் மீண்டும்
உறுதிப்படுத்துகின்றன.
ஆக இஸ்லாம் கூறும்
சட்டதிட்டங்களை ஏற்று நடந்து
இம்மையிலும்
மறுமையிலும்
வெற்றி பெருவோமாக.

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் (தடுக்கப்பட வேண்டியவை)..






வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ் (தடுக்கப்பட வேண்டியவை)

ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!
தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அரபு நாட்டின் அறைகளில் தான்.
(அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மார்க்கப் பணிகளுக்காகவும், மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள். இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில் நடக்காமல் இல்லை. வீடியோவில் பெண்கள் போஸ் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்)
ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காக மாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்கு நிகழ்ந்தவை? எல்லாம் நம் வீட்டுத் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.
நம் வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களைகட்டி நிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா? என்று கேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும் அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.

வீதியில் உலாவரும் வீடியோ கேமரா
கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முத­ல் காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல் அல்லது தர்ஹா மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்ற புராதனச் சின்னங்கள் தான். இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள் கேமரா நுழைந்து டீ காப்பி சப்ளை, டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்று மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்ற வரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கி விட்டுத் தான் வெளியேறும்.
மணமகன் இல்லத்தி­ருந்து துவங்கி, வீதி வீதியாகச் சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லது மண்டபத்திற்குச் சென்று திருமண ஒப்பந்தம் முடியும் வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன.
குறிப்பாக இந்தக் கேமரா, பெண்கள் விருந்து பரிமாறும் போது, அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத் தவறுவதில்லை. அதாவது அங்கிங்கு அசைந்து, வந்த விருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும் பெண்களை கேமராமேன் குறி தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றான். பற்றாக்குறைக்கு அவனுக்குப் பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள் வேறு!
வேலை செய்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தமாக ஆடை விலகல் நடைபெறத் தான் செய்யும். ஆனால் இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.
திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முத­ல் கேமரா மேன்களின் பார்வைகளுக்கு செழிக்க செழிக்க விருந்தாகின்றனர்.
அதன் பின்னர் துவக்கத்தில் நாம் கூறியது போல் அறைகளில் பலரும் உட்கார்ந்து கிரிக்கெட் கமென்டரியைப் போன்ற வர்ணனையுடன் ரசித்துப் பார்க்கும் ஆடவர்களின் பார்வைக்கு இப்பெண்கள் விருந்தாகின்றனர். இவ்வாறு பார்வைகளில் படரவும் தொடரவும் இந்த வீடியோப் பதிவுகள் வகை செய்கின்றன.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகன் கூட பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான். அதற்கு முன்பாகவே கேமராமேன் மணப்பெண்ணை ரசித்துப் பார்த்து விடுகின்றான். பவுடர் பூசி, நகைகள் அணிந்து, வண்ண ஆடைகளுடன் முழு நிலவைப் போல் அமர வைக்கப்பட்டிருக்கும் இந்த மணப்பெண்ணை நோக்கித் தான் கேமரா நிலைகுத்தி நிற்கின்றது.
இப்படி மணப்பெண் முதற்கொண்டு, நமது மனைவி, மக்கள், சகோதரிகள், கொழுந்தியாக்கள் என்று அனைவர் மீதும் பாயும் கேமராவைப் போன்றே இந்த கேமராமேனின் பார்வையும் வளைத்து நிற்கின்றது. இதில் மிகமிக வேதனைக்குரிய விஷயமும் வெட்கக்கேடான விஷயமும் என்னவென்றால் இந்த வீடியோக்களுக்கு நம் வீட்டுப் பெண்கள் கூச்ச நாச்சமின்றி போஸ் கொடுப்பது தான்.
ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! ”(நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!) தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்” என்ற (24:31) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழாடை(யின் ஒரு பகுதி) யைக் கிழித்து அதைத் துப்பட்டா ஆக்கிக் கொண்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ர­லி), நூல்: புகாரி 4758
இதே கருத்தைக் கொண்ட செய்தி அபூதாவூதில் 3577வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது. அதில் ஆயிஷா (ர­லி) அவர்கள் அன்சாரிப் பெண்களைப் பாராட்டுவதாக இடம் பெற்றுள்ளது.
தன்னை மறைத்துக் கொள்வதில் முன்னணியில் நின்ற அந்த நபித்தோழியர் எங்கே? இன்று வீடியோவுக்குப் போஸ் கொடுக்கும் இந்தப் பெண்கள் எங்கே?
ஒரு காலத்தில் ஒரு பெண் சினிமாவில் காட்சியளிக்கின்றாள் என்றால் சமூகம் அவளைக் காறித் துப்பியது. ஆனால் இன்றோ நடிகைகளுக்கெல்லாம் சமூக அந்தஸ்து வழங்கப்பட்டது போல் ஒரு போ­லித் தோற்றம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது. இப்படி ஒரு போ­லித் தோற்றம் இருந்தாலும் மற்ற சமுதாய மக்களிடத்தில் கூட, ஒரு பெண் பல பேர் முன்னிலையில் நேரிலோ அல்லது வீடியோவிலோ காட்சியளிப்பது வெறுப்பிற்குரிய காரியமாகவே கருதப்படுகின்றது. இவர்களிடத்திலேயே வெட்கம் தன் வேலையைக் காட்டும் போது ஒரு முஸ்­லிமிடத்தில் இந்த வெட்க உணர்வு எப்படி இருக்க வேண்டும்?
ஈமான் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளையாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: புகாரி 9
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஓர் இறைநம்பிக்கை கொண்ட பெண் அடுத்தவர் முன் காட்சியளிக்க முன்வர முடியுமா? இப்படிப்பட்ட பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தின் வாடை கூட நுகர முடியாது என்று எச்சரிக்கை செய்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி), நூல்: முஸ்­லிம் 3971
பெண்கள் ஆண்களின் முன்னால் காட்சிப் பொருளாகத் தோன்றுவதன் மூலம் சுவனத்தில் நுழையும் பாக்கியத்தை இழந்து விடக் கூடாது. இப்படி வீடியோவில் பதிவாகி காட்சிப் பொருளாகும் பெண்கள் ஒரு தடவை மட்டும் பாவம் செய்யவில்லை. அந்த வீடியோ கேஸட்டுகள் எப்போதெல்லாம் ஆண்களால் பார்க்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் பாவம் பதியப்படும் நிலையை அடைகின்றார்கள்.

ரோஷம் இழந்த ஆண்கள்
இஸ்லாம் மனிதர்களுக்கு ரோஷ உணர்வை ஊட்டுகின்றது. பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.
”என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்” என்று ஸஅத் பின் உபாதா (ர­லி) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டிய போது, ”ஸஅதின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் அனைத்தையும் தடை செய்து விட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. அதனால் தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை. அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ர­லி), நூல்: புகாரி 6846, 7416
ஒரு மனிதனுக்கு ரோஷம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகின்றது. ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் ரோஷமிழந்து நிற்கின்றார்கள். அதனால் தான் மணம் முடிக்கப் போகும் தானே சரியாகப் பார்த்திராத நிலையில் ஒரு கேமராக்காரன் பார்த்து அவளது அழகை ரசிப்பதற்கு அனுமதிக்கின்றான். இதுபோன்று தனது வீட்டுப் பெண்கள் அனைவரையும் காட்சிப் பொருளாக ஆக்கி, அதை அடுத்தவர்களின் பார்வைகளுக்கு விருந்தாகப் படைக்கின்றான்.
இது இவனது ரோஷ உணர்வு முற்றிலும் உலர்ந்து போய் செத்து விட்டது என்பதையே காட்டுகின்றது. இதில் ஏகத்துவவாதி என்று கூறுவோர் கூட விதிவிலக்காக இல்லை. அவர்களது வீட்டிலும் திருமண உரை என்ற பெயரில் வீடியோ எடுக்கப்பட்டு, அதில் குடும்பப் பெண்களை எல்லாம் அரங்கேற்றும் அவலத்தை நடத்தி விடுகின்றார்கள்.
திருமணங்களில் வீடியோ கலாச்சாரம், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இஸ்லாமிய சமூகத்தைத் தொற்றி நிற்கும் ஒரு கொடிய தொற்று நோயாகும். அந்நிய ஆடவர்களின் பார்வைகளில் நம்முடைய பெண்கள் விருந்தாகும் வீடியோ கலாச்சாரத்தையும் இதை அடிப்படையாகக் கொண்ட திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய கலாச்சார சீரழிவை விட்டும் நமது சமுதாயத்தைக் காக்க வேண்டும்.

போட்டோக்கள்
கல்யாண வீட்டில் வீடியோ எடுப்பது சமீபத்தில் வந்த புதிய கலாச்சாரம் என்றால் போட்டோ எடுத்தல் என்பது புரையோடிப் போன ஒரு பழக்கமாக நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் உள்ளது.
இங்கும் மணமகளை கேமராக்காரன் முதன்முத­ல் பார்த்து தனது கேமராவைப் போலவே கண் சிமிட்டிக் கொள்கின்றான். வீடியோ கேஸட்டாவது பிளேயரில் போட்டால் தான் படம் தெரியும். ஆனால் இந்த போட்டோக்களோ ஆல்பங்களில் சேகரிக்கப்பட்டு அவரவர் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள மேஜைகளில் பார்வைக்கு வைக்கப்படுகின்றது.
போட்டோக்கள் விஷயத்தில் பாஸ்போர்ட், அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ் போன்ற அவசியத் தேவைகளுக்காகவும், ஆதாரங்களுக்காகவும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இவையன்றி அநாவசியமாக போட்டோ எடுத்து அதைப் பாதுகாத்து வைப்பதன் மூலம் நாம் பாவமான காரியம் செய்தவர்களாகின்றோம். இத்தகைய உருவப்படங்கள் வீட்டில் இருக்கையில் மலக்குகள் வருவது கிடையாது.
நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதல்ஹா (ர­லி), நூல்: புகாரி 3322
ஆயிஷா (ர­லி) வீட்டுக்கு நபி (ஸல்) அவர்கள் வருகின்ற போது உருவப்படங்களைக் கண்டு உள்ளே பிரவேசிக்க மறுக்கின்றார்கள் என்பதை புகாரி 3226 ஹதீஸில் காண முடிகின்றது.
எனவே நமது வீட்டில் அருளைச் சுமந்து வரும் மலக்குகள் உள்ளே வருவதற்குத் தடையாக அமைகின்ற இந்த உருவப் படங்களை விட்டும் நாம் தவிர்ந்திருக்க வேண்டும்.
இது மட்டுமின்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி திருமண வீடியோவினால் ஏற்படும் அனைத்து தீமைகளும் திருமண போட்டோக்களாலும் ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இது போன்ற தீமைகளை விட்டும் நாம் விலகியிருப்போமாக!

தயவுசெய்து இதை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டால் அனாச்சாரங்கள் சற்றே குறையும்

அல்லாஹ்வே மிக அறிந்தவன்...


மதுவை பற்றி அறிவியல் என்ன சொல்லுகிறது இஸ்லாம் என்ன சொல்லுகிறது"


kudi

இயற்கை அன்னையால் படைக்கப்பட்ட மனிதன் பிறந்து வளர்ந்து தீய பழக்கங்களைக் கையாண்டு அற்புதமான வாழ்க்கையைச் சீரழித்து மாண்டும் போகிறான். இயற்கை மனிதனை ஆறறிவு கொண்ட மனிதனாகவும், பகுத்தறியும் உள்ள மனிதனாகவும் படைத்துள்ளது.புலன்களின் ஈடுபாட்டால் தன்னை இழந்து நோயின் பிடிக்கு ஆளாகி தவிக்கின்றான். இந்த புலன்களை அடக்கியாண்டால்தான் அவன் மனிதனாக முடியும். இந்த புலன்கள் அனைத்தையும் உடைந்த காட்டாற்று வெள்ளம் போல் ஓடச் செய்வதற்கு முழுமுதற் காரணமாக அமைவது மதுப்பழக்கம்தான்.
மனிதனின் உடல், மனம், உள்ளம் இவற்றை பாதிக்கச் செய்து அவனது வாழ்க்கையையும், அவனது குடும்பத்தினர் வாழ்க்கையையும், சீரழித்து சின்னாபின்னமாக்கக் கூடிய தீய பழக்கம் தான் குடிப்பழக்கம்.சண்டை சச்சரவுகள், களவு, கொலை, கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும், குற்றங்களும் மது எனும் அரக்கனின் தூண்டுதலாலேயே நடைபெறுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.மகாயுத்தம், பஞ்சம், இயற்கை பேரழிவு, கொள்ளை நோய் ஆகிய இம்மூன்றும் சேர்த்து அழித்ததை விட மதுபானம் அதிகமான மக்களை கொள்ளை கொண்டுள்ளது.
பழங்காலத்தில் மன்னர்கள் சோமபானம் என பழச்சாறுகள் கொண்டு தயாரித்து விருந்து உபசரிப்புகளில் பயன்படுத்தி வந்தனர். தீய குணங்கள் அனைத்திற்கும் மதுப்பழக்கம் தான் வழிகாட்டி என்று எடுத்துரைப்பதுடன் மதுபானம் அருந்தக்கூடாது எனவும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவமன்று. அது பதார்த்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும். கோதுமை, சோளம், ஓட்ஸ், பார்லி, அரிசி, திராட்சை போன்றவற்றிலிருந்து தயாரிக்கப் படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் (நொதி) பழத்திலும், தானியங்களிலுள்ள மாவையும், சர்க்கரையையும் மதுவாக மாற்றி விடுகிறது.
அதுபோல் தற்போது தயாரிக்கப்படும் மதுவில் மூலக்கூறாக ஈதைல் ஆல்கஹால் (Ethyl Alcohol) உள்ளது.
மதுக்களில் உள்ள ஈதைல் ஆல்கஹாலின் அளவு
ரம் 50 - 60%
விஸ்கி, பராந்தி, ஜின் 40 - 45%
ஒயின் 10 - 15%
சாராயம் 40 - 50%
பீர் 4 - 8%
இதில் உள்ள ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடு பரவல் மூலம் இரத்தத்தில் வெகு விரைவில் கலக்கிறது. இதனால் உடனே போதை உண்டாகிறது.இரத்தத்தில் ஆல்கஹால் அளவு அதிகரிக்க அதிகரிக்க மனிதன் தன்னை இழக்க ஆரம்பிக்கிறான். முதலில் தசை கட்டுப்பாடு இழக்கும். தொடு உணர்வு குறையும். சிந்தனை மாறும், வாய் வார்த்தை குளறும். நடையில் தள்ளாட்டம், அதிக மயக்கம், ஞாபகமறதி, குழப்பம் போன்றவை உண்டாகும்.
ஒரு மனிதன் குடிப்பதைப் பொறுத்து குடிக்கப்படும் மதுவில் 20 சதவிகிதம் ரத்தத்தில் நேரடியாக கலக்கிறது. மீதமுள்ள மது முழுவதையும் கல்லீரல் அரிக்கும் வரை அது மூளை முதலான உடல் உறுப்புகளில் பரவி பல வகையான மாற்றங்களை உண்டுபண்ணுகிறது.பின்பு உடல் நரம்புகள் பாதிப்படைந்து, பார்வை நரம்புகளும் பாதிக்கப்படும். பித்தம் அதிகம் சுரந்து குடலில் அழற்சி உண்டாகி கல்லீரல் செல்கள் சேதப்படுகின்றன. இவை ஆரம்பத்தில் தெரிவதில்லை.பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்படும் இந்த மதுப்பழக்கம் நாள் ஆக ஆக, எந்த நேரமும் அதைப் பற்றிய சிந்தனையையே உண்டாக்கும். தினமும் அருந்தும் எண்ணம் உண்டாகும். அருந்தும் அளவும் அதிகரிக்கும்.
இப்படி அளவுக்கு அதிகமாக மது குடிப்பவர்களின் நரம்புகள் தளர்ச்சியடைந்து, கை, கால்கள் நடுக்கம் உண்டாகும். இந்த நடுக்கத்தைப் போக்க மேலும் மேலும் மது அருந்த ஆரம்பிப்பார்கள். சுயக் கட்டுப்பாட்டை இழந்துவிடுவார்கள்.குடிப்பதற்காக பலவிதமான போலிக் காரணங்களைக் கூறி நியாயப்படுத்துவார்கள். மனைவி, மக்கள் உறவுகளுடன் இனிமேல் குடிக்க மாட்டேன் என சத்தியங்களை அள்ளி விடுவார்கள்.காதல் தோல்வி, விரக்தி, குழந்தை இல்லையென பல ஆண்கள் மது அருந்துகிறார்கள். இது மேலும் பாதிப்பை ஏற்படுத்துமே ஒழிய மாற்றத்தை உண்டு பண்ணாது என்பதை புரிந்து கொள்வதில்லை.பொதுவாக மது அருந்துவது உடல்நலத்தை மட்டுமின்றி மனநலத்தையும் அதிக அளவில் பாதிக்கும். மது குடிப்பது பற்றிய சிந்தனை இருந்து கொண்டேயிருக்கும். உடல் அளவிலும் மனதளவிலும் பதற்றத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தும்.மெல்ல மெல்ல காரணமற்ற பயத்தால் தன் குடும்பம் பற்றிய அவநம்பிக்கையான எண்ணங்கள், தாம்பத்திய உறவில் விரிசல், சந்தேக எண்ணெங்கள் போன்றவை ஏற்படும். இதுபோல் உடலிலும், மனதிலும் பல பாதிப்புகள் உண்டாகும்.
மதுவினால் உண்டாகும் பாதிப்புகள்:
நாம் சாப்பிடுகின்ற எத்தகைய உணவும் சீரமணடைந்த பிறகு குடலில் உட்கிரகிக்கப்பட்டு ரத்தத்தோடு கலந்துவிடும். இச்சத்துக்கள் கல்லீரலுக்குச் சென்று அங்கு பலவகையான மாற்றங்களைப் பெற்று, உடலின் தேவைக்கு ஏற்ப பல பாகங்களுக்கு அனுப்பப்படுகிறது. மீதமுள்ள சத்துக்கள், கல்லீரல் சேமித்து வைக்கப்படுகிறது. அதுபோல அருந்தும் மதுவானது சிறுகுடலால் உட்கிரகிக்கப்பட்டு இரத்தத்தில் கலந்து கல்லீரலுக்கு சென்றடைகிறது. கல்லீரலில் சேமித்து வைக்கப்படும் சத்துக்கள் போல் மதுவும் வளர்சிதை மாற்றங்களுக்கு உட்படுகிறது. அதாவது கல்லீரலில் உள்ள செல்களின் மைட்டோகான்டிரியாவிலுள்ள நொதியிலிருக்கும் ஆல்கஹால் டீஹைடிரோஜனேஸ் என்ற நொதியினால் மாற்றமடைந்து அசிட்டால்டீஹைடு என்ற பொருளாக மாற்றப்படும். மீண்டும் அசிட்டால்டீஹைடானது டீஹைடிரோஜினஸ் என்ற நொதியில் அசிட்டால் டீஹைடு, ஆயிடேட் என்ற பொருளாக மாற்றப்படும். இதுபோன்ற பல்வேறு நச்சுப்பொருட்களும், மதுவும் கல்லீரலைப் பெரிதும் பாதிப்படைய வைக்கிறது.மதுவை தொடர்ந்து அதிகமாக அருந்தும்போது கண்டிப்பாக கல்லீரல் பாதிக்கப்படும். தினமும் முப்பது கிராமுக்கு அதிகமாக மது அருந்தும் ஆண்களுக்கும், 20 கிராமுக்கு அதிகமாக மது அருந்தும் பெண்களுக்கும் கல்லீரல் பாதிப்படைகிறது.
மது அதிகமாக அருந்தும்போது ஏற்படும் மாற்றங்களால் கல்லீரலில் கொழுப்புப் பொருட்கள் சேர்கின்றன. அதிகமான கொழுப்பு அமிலங்கள் உற்பத்தியாக்கப்படுகின்றன. அதேநேரம் கொழுப்பு அமிலங்கள் குறைவாக செலவழிக்கப்படுகிறது. இதனால் இவை கல்லீரலில் படிந்து கல்லீரைப் பாதிப்படைய செய்கிறது.கல்லீரலில் கொழுப்பு அமிலங்கள் அதிகமாகத் தங்குவதால் கல்லீரல் செல்கள் பாதிக்கப்பட்டு நலிந்துபோகின்றன. ஹையலின் என்ற பொருட்கள் கல்லீரலை இறுக்கி நோயாக மாற்றுகிறது. மது அருந்துவோருக்கு கல்லீரலில் இரும்புச்சத்து அதிகமாகப்படிகிறது.துவக்கத்தில் அறிகுறிகள் ஏதும் தெரியவராது. ஆனால் கல்லீரல் பாதிக்கப்பட்டு காமாலை, மூளை பாதிப்பு, நரம்பு பாதிப்பு, வைட்டமின் குறைபாடு, வயிற்றுவலி, வயிற்றுப்புண், கை கால் நடுக்கும் உண்டாகும். 
இஸ்லாம் மதுவை பற்றி என்ன சொல்லுகின்றது பார்ப்போம் 
(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)
மது அருந்துதல் ஷைத்தானின் அருவக்கத்தக்க செயலாகும்: -
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத்
தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்-குர்ஆன் 5:90-91)
மது அருந்துபவர் மற்றும் மதுவுடன் தொடர்புடையவர்கள் அல்லாஹ் மற்றும் நபி அவர்களால் சபிக்கப்பட்டவராவர்: -
மது அருந்துபவர், அதனை அருந்தச் செய்பவர், வாங்குபவர், விற்பவர், தயாரிப்பாளர், சுமப்பவர், இதன் மூலம் கிடைத்த வருவாயை சாப்பிடுபவர்கள் அனைவரையும் நபி அவர்கள் சபித்துள்ளார்கள். (ஆதாரங்கள் : அபூதாவுத், திர்மிதி, இப்னுமாஜா)
மேற்கூறப்பட்ட ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம் ஆகிய கிரதங்களில் இடம்பெறும் போது “அல்லாஹ் சபிக்கிறான்” என்று வந்துள்ளது.
மது அருந்துபவன் சுவனம் புக மாட்டான்: -
மதுவில் மூழ்கி இருப்பவனும், பெற்றோரைத் துன்புறுத்துபவனும், தன் மனைவியின் மீது வீண்பழி சுமத்துபவனும் சுவனம் புகமாட்டான்” (ஹாகிம்)
“தொடர்ந்து மது அருந்துபவர், ஓடிப் போன அடிமை, தம் குடும்பத்தார்கள் செய்யும் தீய செயல்களைக் கண்டு திருப்தியடைந்தவர் ஆகிய இந்த மூவருக்கும் அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்திருக்கிறான்”
மது அருந்துபவர்களுக்கு மறுமையில் புகட்டப்படும் பானம்: -
“போதைப் பொருளை அருந்துபவர்களுக்கு “தீனத்துல் கப்பால்” எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்” என்று நபி அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், “தீனத்துல் கப்பால் என்றால் என்னவென்று” கேட்டனர். அது ‘நரகவாசிகளின் வேர்வை’ அல்லது ‘நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்’ என பதிலளித்தார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.
மதுபோதையில் மரணித்தவன் சிலை வணங்கியைப் போலவனாவான்: -
நபி அவர்கள் கூறுகிறார்கள்: மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலை வணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : அஹமத்
பேதை தரும் அனைத்துமே மதுவைச் சேர்ந்ததாகும்: -நபி அவர்கள் கூறுகிறார்கள்: போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் ஹராமாகும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்
வெ்வேறு பெயர்களில் புழங்கும் மது வகைகள் பற்றிய எச்சரிக்கைகள்: -
‘என்னுடைய சமுதாயத்தில் சிலர் நிச்சயம் மது அருந்துவார்கள். ஆனால் அதற்கு வேறு பெயரைக் கூறிக் கொள்வார்கள்’ அறிவிப்பவர் : அபூமாலிக் அல்-அஷ்அரி (ரலி), ஆதாரம் : இப்னுமாஜா
‘விபச்சாரம் பெருகும், மது அருந்தும் பழக்கம் பரவலாகும்’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)
மது அருந்தியவனுக்கு நபி அவர்கள் கொடுத்த தண்டனை: -
நபி அவர்களின் காலத்தில் மது அருந்தியவனைப் பார்த்து, “அவனை அடியுங்கள்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது எங்களில் சிலர் செருப்பாலும், ஆடைகளினாலும் கரத்தாலும் அவனை அடித்தனர்.” (ஆதாரம் : புகாரி)
மது அருந்திய நிலையில் மரணித்தால் நரகில் நுழைவான்! அதிலிருந்து விடுபட்டு பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் மன்னிப்பான்: -
மது அருந்தி போதையடைந்தவனின் நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் மது அருந்தினால் அவனுடைய நாற்பது நாட்களின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவன் அவ்வாறே இறந்துவிட்டால் நரகில் நுழைவான். தவ்பாச் செய்தால் அல்லாஹ் அவனை மன்னிப்பான். மீண்டும் அருந்தினால் மறுமை நாளில் ரத்கத்துல் கப்பால் எனும் பானத்தை அல்லாஹ் அவனுக்கு புகட்டுவது கடமையாகிவிட்டது என்று நபி அவர்கள் கூறியபோது, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதர்  அவர்களே! ரத்கத்துல் கப்பால் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கவர்கள், நரகவாசிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) நூல்: இப்னுமாஜா)
ஆல்கஹால் பற்றிய இஸ்லாத்தின்.நிலைபாடு என்ன?
போதையை உண்டுபண்ணக் கூடிய ஒன்றாகும். போதை தரும் எந்தப் பொருளையும் நாம் உண்ணக் கூடாது என்பது மார்க்கத்தின் கட்டளை.போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம்  அவர்கள் கூறியுள்ளார்கள்.அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் "அல்பித்உ எனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் "மிஸ்ர் என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர்  அவர்கள் போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி) நூல்: புகாரி 6124
அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: திர்மிதீ 1788 நஸயீ 5513. 3725.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால் போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் (3995)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள்.
முஸ்லிம் (4071)
மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காக இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் போதை ஏற்படும்.எனவே அல்கஹாலைப் பருகுவதும் கூடாது குறைந்தளவிலான அல்கஹோல்(போதை மூலப்பொருள்)கொண்டுள்ள உற்சாக பானமான “ரெட்புல்”. அல்கஹால் சேர்க்கப்படும் கொகா கோலாவைப் பருகுவதும் கூடாது என்பது தான் மேற்கண்ட செய்திகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் மார்க்கத்தின் தெளிவான நிலைபாடாகும்.
அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.

சந்தனக்கூடு என்கின்ற நாகூர் கோவில் திருவிழா?



nnnn

நம்பிக்கை கொண்டவர்களே!நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்.(உலகப்பொதுமறை 2:208)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும், முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (உலகப்பொதுமறை 3: 102)
நாங்கள் முஸ்லிம்கள்:எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்துக் கொண்டு ஸாலிஹான (நல்ல) செயல்களை செய்து கொண்டு நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் எனக் கூறுகிறாரோ, அவரை விட அழகிய சொல் சொல்பவர் யார்? (உலகப்பொதுமறை 41:33)
நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த ஜியாரத்திற்கு எதிரான தர்கா !!
முதலில் ஒன்றை பதிவுசெய்கிறோம் : அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தராத,தடை செய்த வழிமுறையை தங்களின் வழிமுறையாக எடுத்துக்கொண்டது மட்டுமல்லாமல் அது இஸ்லாத்தில் உள்ளது தான் என்று அல்லாஹுடைய தூதரின் பெயரால் இட்டுக்கட்டி நியாயப்படுத்தப்படும் தர்கா வழிபாட்டை எதிர்கிறோமே ஒழிய அதில் அடக்கம் செய்யப்பட்டவர்களை நாம் ஒருபோதும் குறைசொல்ல முடியாது,குறை சொல்ல கூடாது. நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் சகோ.சாஹுல் ஹமீது பாதுஷா அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரியட்டும்.
ஒருவரை நாம் நல்லடியாராக இருக்கக்கூடும் என்று சொல்வதாக இருந்தால் (உண்மையில் அல்லாஹ்வின் பார்வையில் அவர் நல்லடியாரா,இல்லையா என்பது நமக்கு தெரியாது அது வேறு விஷயம்) ஏதோ ஒரு நற்காரியம் அவர்செய்வதை பார்த்திருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம்.அப்படி இருக்கும்பட்சத்தில் அந்த நற்காரியங்களை நாமும் செய்து அல்லாஹ்வை நெருங்க வேண்டும் நாமும் நல்லடியாராக இருக்க வேண்டும் என்று நினைப்பது தான் நியாயமானது.
அந்த வகையில் நாகூர் சாஹுல் ஹமீது பாதுஷா அவர்களை பற்றி தர்கா விசுவாசிகள் சொல்லும்போது
“சாஹுல் ஹமீது பாதுஷா அவர்கள் நாகூர் வந்த பிறகுதான் நாகூரில் முஸ்லீம்கள் வந்தார்கள் அவர்களின் மார்க்க பிரச்சாரத்தால் தான் நம் பாட்டன், பூட்டன் எல்லாம் இஸ்லாத்தை ஏற்று இன்று நாமும் முஸ்லிமாக இருக்கிறோம் என்று சிலாகித்து சொல்கிறார்கள்” அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.தீர்க்கமாக சொல்ல முடியாவிட்டாலும் நாமும் அதை ஏற்கிறோம் – அவர்கள் தாவா பணி செய்திருக்ககூடும் ஆனால் அதற்க்கு பகரமாக நாமும் தாவா பணி செய்வதா ? அல்லது அவர்கள் பெயரால் சந்தனக்கூடு,கந்தூரி விழா கொண்டாடுவதா ? முதலில் சிந்திக்க வேண்டுகிறோம்.ஜியாரத் :
ஜியாரத் என்ற செயல் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட செயல் தான் இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. இன்று முஸ்லீம்கள் பெரும்பாலும் ஜியாரத் என்ற சொல்லை விளங்கிய அளவுக்கு அதை ஏன் செய்ய வேண்டும் எப்படி செய்ய வேண்டும் என்பதை அறியாதவர்களாகவே உள்ளனர். அதனால் தான் ஜியாரத்தின் பெயரால் இன்று பல மார்க்க விரோத செயல்கள் நடைபெறுவதை பார்க்கிறோம்.
ஜியாரத் செய்ய அனுமதி :
ஜியாரத் செய்ய அனுமதி : "அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல்: முஸ்லிம் (1777)
"அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுவிற்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளைச் சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: திர்மிதி (974)
மேற்கண்ட நபிமொழியில் ஜியாரத்தின் நோக்கம் “ஜியாரத் உங்களுக்கு மறுமையை நினைவூட்ட கூடியது என்று நபி(ஸல்) அவர்கள் தெள்ளத்தெளிவாக கூறுகிறார்கள்.
ஜியாரத் செய்வது எப்படி??
கப்ருகளை ஜியாரத் செய்வதாக இருந்தால் பொதுவான கப்ருகள்(பொது மையவாடி) இருக்கும் இடத்துக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களுக்காக இறைவனிடம் துஆ செய்யவேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் (தம் இறுதி நாட்களில்)என்னுடன் தங்கியிருந்த ஒவ்வொரு இரவின் பிற்பகுதியிலும் (மதினாவில் உள்ள)" பகீஉல் கர்கத் " பொது மையவாடிக்குச் செல்வார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)அவர்கள் நூல்: முஸ்லிம்
இது ஒரு வகை மற்றொன்டு இனைவைப்பாளர்களின் கப்ருக்குச் சென்று வருந்துதல் அவர்களுக்காக துஆ செய்யக்கூடாது.கீழ் வரும் செய்தியிலிருந்து அதை புரிந்து கொள்ள முடியும்.
நபி(ஸல்)அவர்கள் தன்னுடைய தாயின் கப்ரை ஜியாரத் செய்கின்ற போது அழுதார்கள்.அவர்களை சுற்றி உள்ளவர்களும் அழுதார்கள்.நபி(ஸல்)அவர்கள் நான் என்னுடைய தாய்க்கு பாவமன்னிப்பு கேட்பதற்கு இறைவனிடம் அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஜியாரத் செய்வதற்கு அனுமதி கேட்டேன் எனக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனவே நீங்கள் கப்ருகளை ஜியாரத் செய்யுங்கள் அது உங்களுக்கு மரணத்தை நினைவுட்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஹ{ரைரா நூல்: முஸ்லிம் 1622
இந்த இரண்டு வகை ஜியாரத்தான் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டது.இவ்வாறு செய்வதின் மூலம் நமக்கு மறுமை சிந்தனை மற்றும் மரண சிந்தனை அதிகரிக்கும் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.கப்ருகளைப் பார்க்கும் போது நாமும் மரணிக்கக்கூடியவர்கள் தான் நமக்கும் மரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் இந்த உலகில் நாம் நிரந்தரமாக வாழப்போவது இல்லை என்று மரண சிந்தனை வரும்.அந்த அச்சம் அவனை தவறுகள் செய்வதை விட்டும் தடுக்கும் நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த அடிப்படையில் தன் வாழ்கையை அமைத்துக் கொள்ள உதவும்.
ஆனால் நம்முடைய சமூதாயம் இன்று கப்ரு ஜியாரத் என்ற பெயரில் செய்யக்கூடிய காரியங்களைச் செய்தால் நமக்கு மரண சிந்தனை வராது மற்றமாக தவறன சிந்தனைகள்தான் வரும்.ஏராளமான அனாச்சாரங்கள் அங்கே கொட்டிக்கிடக்கின்றது.
கப்ரு ஜியாரத்தின் போது ஓதும் துஆ.
கப்ருகளை ஜியாரத் செய்யும் போது ஓதுவதற்கு நபி(ஸல்)அவர்கள் துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள்.அந்த துஆக்களை நாமும் கப்ருளை ஜியாரத் செய்யும் போது ஓதவேண்டும்.
السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ[அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன வஇன்னா இன்ஷா அல்லாஹ் பிகும் லாஹிகூவ்ன்.]
என்ற துஆவை நபி(ஸல்)அவர்கள் கப்ருகள் இருக்கும் இடத்துக்குச் சென்றால் கூறுவார்கள்.
(பொருள்: இறை நம்பிக்கை கொண்ட கப்ரு வாசிகளுக்கு அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.அல்லாஹ் நாடினால் நாமும் உங்களை சந்திக்கக்கூடியவர்களே!)
அறிவிப்பவர்: அபுஹ{ரைரா (ரலி)அவர்கள் நூல்: முஸ்லிம் 367 எனவே இப்படிதான் நபியவர்கள் காட்டிய அடிப்படையில் கப்ருகளை ஜியாரத் செய்யவேண்டும்.
முன்சென்ற நல்லோர்களை நேசிப்பது,மதிப்பது என்றால் என்ன ?
நபிமார்களுக்குப் பிறகு அவர்களின் சீரிய தெண்டுகளை அவ்லியாக்கள் என்னும் அல்லாஹ்வின நேசர்கள் செய்தார்கள். அறியாமை இருளில் மூழ்கிக் கிடற்த சமுதாயத்தைத் தட்டி எழுப்பினார்கள். இவர்களின் உயரிய போதனைகளால் உறங்கிக் கிடந்த சமுதாயம் உணர்வு பெற்றது. இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் எழுச்சி பெற்றனர்.
ஏராளமானோர் நேர் வழி பெற்றனர்.அதற்காக அவ்லியாக்கள் என்னும் அந்த இறை நேசச் செல்வர்களை நாம் போற்ற வேண்டும். கண்ணியப் படுத்த வேண்டும்.
அவர்களைப் போற்றுவது கண்ணியப்படுத்துவது என்பதெல்லாம், அவர்கள் வாழ்ந்த முறைப்படி நாமும் வாழ்வதும், அவர்கள் பேணி நடந்த நபி வழியை நாமும் பேணி நடப்பதும் தான்.
ஆனால் இன்று தர்கா என்ற பெயரில் நடக்கும் அத்தனையும் யூதர்களின் வழிமுறை அதை பற்றி பிடித்துக்கொண்டு தர்காவை எதிர்க்ககூடியவர்களை யூதர்கள் என்று நம்மை விமர்சிக்கிறார்கள் என்ன கொடுமை..
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)
இது இணைவைப்பு வரை அவர்களை கொண்டு சென்றுவிட்டது – அல்லாஹ் எல்லோரையும் பாதுக்காக்கவேண்டும். ”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065, 066)
“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அல்குர்ஆன் 18:103, 104
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் (மார்க்க விஷயத்தில்) பிற சமூகத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர்கள் அவர்களை சார்ந்தவர். நூல் : அபூ தாவூத் 3512
நபிகளாரின் வழிகாட்டுதல்கள் இல்லாத செயலை மார்க்கம் என ஒருவர் செய்தால் அது நரகத்திற்கு அழைத்து சென்று விடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபிஅவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத) பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள் வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் رَضِيَ اللَّهُ عَنْهُ,ஜாபிர்رَضِيَ اللَّهُ عَنْهُபுகாரீ,ந்ஸயீ, முஸ்லிம்)
பாவங்களிலேயே மிக பெரிய பாவமான அல்லாஹ்விற்கு இணை வைத்தல் என்ற ஒரு செயல் தர்காக்களில் அரங்கேறுகின்றன அவ்லியாக்களை அழைத்து பிரார்திப்பதனாலும்,அவர்களுக்காக நேர்ச்சை செய்வதன் மூலமும்.
அல்லாஹ் கூறுகிறான்: -
நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ, வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள், உங்களைப் போன்ற அடியார்களே!….. (அல்குர்அன் 7:194)
“மறுமை நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே அவை அறியாது. (அல்குர்அன் 46:5)
அல்லாஹ் இணைவைப்பை மன்னிக்கவே மாட்டான்! (நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிடுகிறான்… (அல்குர்அன் 17:23)
“நிச்சயமாக அல்லாஹ், தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இதனைத் தவிர (மற்ற) எதனையும் தான் நாடியோருக்கு மன்னிப்பான்……(அல்குர்அன் 4:48)
அல்லாஹ் கூறுகிறான்: -
“நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும்-அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் – யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்”(அல்-குர்ஆன் 2:159)
“சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்-குர்ஆன் 3:71)
மக்களே! சிந்தித்து புரிந்துகொள்ளுங்கள் எனது பேச்சை கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரசாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்துவிட்டேன். உங்களுடைய அல்லாஹ்வின் நூலையும் (திருக்குரான்) அவனுடைய தூதரின் வழிமுறையையும் விட்டுசெல்கிறேன். நீங்கள் அவற்றை பின்பற்றினால் ஒருபோதும் வழி தவறமாடீர்கள். (முஸ்லீம் – 2334 ,இப்னு மாஜா -3074)
நேர்வழி காட்டுவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.